Status 2021 (155)
தன் உயிரைப் பணயம் வைத்து பெற்றெடுத்த குழந்தைக்கு தாய்தான் கடவுள். அந்தக் குழந்தையின் அழுகுரல் சத்தத்திற்கு ஏற்ப குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து வளர்க்கும் சக்தி தாய்க்குத் தெரியும். அது போல் நமக்கு ஆறறிவையும் கொடுத்து இவ்வுலகில் வாழ வழிவகுத்த கடவுளுக்குத் தெரியும் நமக்கு என்ன வேண்டும், எப்பொழுது கொடுக்க வேண்டும் என்பதும், தீயவர்களை எப்போது எப்படி அழிக்க வேண்டும் என்பதும். எனவே நாம் பொறுமையாக இருந்து நாம் செய்யும்ள நற்செயலுக்கான பலன் எப்படியும் நமக்கு வந்தே அடையும் என்பதை மனதார புரிந்து கொண்டு அந்நாளை எதிர்பார்த்து மகிழ்வுடன் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment