Status 2021 (165)
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உறவுகளின் வலிமையையும் அவசியத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டும். பெற்றோர்களே தங்கள் சுயநலத்திற்காக தங்கள் பெற்றோர்களையும் உறவுகளையும் ஒதுக்கி தங்களைப் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள், பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற இருமாப்பில், தங்கள் பிள்ளைகள் தங்களைப் பார்த்து தானே வளர்கிறது என்பதை உணராமல் வாழும்போது இவர்களுக்கும் அதே நிலைதான் வரும். காலம் கடந்து கடைசி காலத்தில் தனிமையை உணரும் பொழுதுதான் அதன் வலி தெரியும். எனவே நமது பிள்ளைகள் எதிர்காலம் சிறக்க வேண்டுமென்றால் நாம் சொந்த பந்தங்களை நமது பூர்வீக சொத்தாக நினைத்து அரவணைத்து வாழ்ந்து காட்ட வேண்டும் நம் பிள்ளைகளுக்கு!
Victory King. (VK)
No comments:
Post a Comment