Status 2021 (150)
ஒவ்வொருவரின் வாழ்விலும் குழந்தைப் பருவத்தில் முதன்மையான இடத்தை பெறுவது தாத்தா மற்றும் பாட்டியாகத்தான் இருப்பார்கள். தங்கள் குழந்தைகளை சரியாக கவனிக்காத மகன் அல்லது மகளுக்கு தகுந்த அறிவுரை கூறுவதுடன் குழந்தைகளை அரவணைத்து, பாசத்தை காட்டி பேரக் குழந்தைகளுக்கும் அவர்களது தாய் தந்தையருக்கும் ஒரு பாலமாக அமைந்து குடும்பத்தை மகிழ வைக்கும் பொறுப்பு தாத்தா பாட்டிகளிடமே உள்ளது. அதை விடுத்து குழந்தைகள் மனதை பெற்றோர்களுக்கு எதிராக திசை திருப்பி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் தாத்தா பாட்டிகள் ஒரு குடும்பத்தில் இருந்தால் தங்களுக்கும் நிம்மதி இல்லாமல் பேரக் குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்க வைத்து அக்குழந்தைகளின் பெற்றோர்களையும் நிம்மதியாக வாழ விடாது குடும்பத்தில் ஆரோக்கியமற்ற சூழ்நிலைதான் நிலவும். இதனை தாத்தா பாட்டிகள் நன்கு உணர்ந்து வாழ்ந்தால் வளரும் நல்லதொர் குடும்பம்!
Victory King (VK)
No comments:
Post a Comment