Status (2021) 149
நான் நேர்மையாக இருப்பதால்தான் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை என்று கூறுபவர்கள் அவர்களின் உச்சகட்ட உயர்வு மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்கு உடையும்போதுகூட ‘நான் நேர்மையானவன் அதனால்தான்’ என்று பறைசாற்றிக்கொள்வார்கள். நேர்மையின் எதிர்வினை செயல்பாடுகளே இவை. நேர்மை என்பது ‘எண்ணம், சொல், செயல்’ என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமையப்பெற்று ஒரே மாதிரி நடந்துகொள்வதே. எனவே நாம் நேர்மை தவறாது வாழ்ந்து நம் பெருமையை நிலைநாட்டுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment