Status 2021 (153)
மன அழுத்தம் என்பது நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம். நம்மை சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடி நமக்கு தரும் பரிசு மன அழுத்தம். மன அழுத்தம் என்பது ஒரு மிகப் பெரிய பிரச்சனை, மன உளைச்சல் என்பது மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்துக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை மனதுக்குள்ளேயே வைத்து புழுங்காமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அதனுடைய அழுத்தத்தின் தன்மையை குறைக்கலாம். மேலும் அந்தப் பிரச்சனையைப் புறம் தள்ளி திசை திருப்பி மனபளுவைக் குறைக்கலாம். சாந்தம் ஒன்றே சாதிப்பதற்கு ஒரே வழி என்பதை மனதில் கொண்டு சிந்தித்து செயல்படலாம். எனவே, நம் மனதை நாம்தான் ஒருமுகப்படுத்தி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முயலவேண்டும்.
Victory King (VK)
No comments:
Post a Comment