Status 2021 (148)
பாசம் என்பது இரண்டு இதயங்கள் இணைந்து உணர்வுகளைப் பகிர்ந்து அன்பால் பிணைக்கப்படும் ஒரு அற்புத சக்தி. நம் தாய் தந்தை நம்மிடம் காட்டும் பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. பத்து மாதம் நம் முகத்தையே பார்க்காமல் நம்மை தன் கருவறையில் வைத்து நம் அசைவுகளை உணர்ந்தே ஆனந்தப்பட்டு பிறகு நம்மை இப்பூவுலகிற்கு அறிமுகப்படுத்தி தந்தை உறவினர்களையும் அறிமுகப்படுத்தி நம்மை சீராட்டி பாராட்டி வளர்த்த தாயையும், நமக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காமல் தாங்களே ஏற்று நம்மையும் இந்நிலைக்குக் கொண்டுவந்த தாய் தந்தையரையும் உளமாற நேசித்து இறுதிவரை அவர்களைப் பேணிக் காப்பாற்றுவது நமது தலையாய கடமை. பணம் வந்து போகும் ஒரு நிலை இல்லாதது. ஆனால் இதயப்பூர்வமான பாசம் நம்மிடம் நிலையாக வந்துவிட்டால் நம்மை விட்டு விலகாது. எனவே எக்காலத்தும் தாய் தந்தையர்களை சுமையாக கருதாமல் ஓர் சுகமான பாசப்பிழம்பாக வைத்து அவர்களோடு நாமும் மகிழ்வோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment