Tuesday, December 30, 2025

#Victory King: மனதின் குதூகலம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2430🥰 

நாம் நினைப்பது நடப்பதில்லை, நடப்பது பிடிப்பதில்லை என்று இதையே நினைத்து வருந்தி கொண்டிராமல் நம் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் இடையேயும் ஏதோ ஒரு மகிழ்ச்சி ஒளிந்து கொண்டு தான் இருக்கும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு அந்த நாளை எதிர்பார்த்து வாழப் பழகி விட்டால் நம் மனதில் குதூகலம் குடிகொண்டு விடும். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Wednesday, December 24, 2025

#Victory King: நம் பண்பு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2429🥰

நாம் எவ்வளவு உயர்ந்தவன் என்பது நம் பிறப்பாலோ படிப்பாலோ பணத்தாலோ அறிவாலோ அல்லது நமக்கு கிடைக்கும் புகழ்ச்சியாலோ  இல்லை. நாம் மற்றவர்களால் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறோம் என்பதில் தான் உள்ளது. நம் பண்புதான் அதை நிர்ணயிக்கிறது. உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Sunday, December 21, 2025

#Victory King: "உள்ளங்கை நெல்லிக்கனி"

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2428🥰 

ஒரு நடிகர் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறி அதற்கு உயிர் கொடுக்கும் பொழுது தான் அவர் அதில் வெற்றி பெற முடிகிறது. அதுபோல்தான் நம் மனதில் எதை நினைக்கிறோமோ அதை உறுதியுடன் முழு நம்பிக்கையுடன் மேலும் மேலும் சிந்திக்கும் பொழுது தான் அதற்கான நம் வெற்றி "உள்ளங்கை நெல்லிக்கனி" என்பதை உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Friday, December 19, 2025

#Victory King: "மனமே மருந்து"

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2427🥰

சில மனிதர்கள் என்றும் மறக்க முடியாத வலிகளையும், சில மனிதர்கள் என்றும் அழிக்க முடியாத பழிகளையும் அதே சமயம் சில மனிதர்கள் நமக்கு அழகான நினைவுகளையும் பரிசாக தருகிறார்கள். நாம் அடைந்த வலிகளையும் பழிகளையும் நம் மனதில் இருந்து முழுமையாக அகற்றி நமக்கு கிடைத்த அழகான நினைவு பரிசுகளை மட்டும் மனதில் ஏற்றி நம் ஆயுளை ஆனந்தமாக்கி வாழப்பழகுவோமே."மனமே மருந்து"

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏 

Monday, December 8, 2025

#Victory King: நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2426🥰 

சந்தர்ப்பங்கள்  அமையாவிட்டாலும் நாமாகவே ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நம் குடும்பங்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் முகமலர்ச்சியுடன் அகமகிழ்ந்து அளவளாவி நாவிற்கும் இனிய விருந்தையும் அளிக்கும் பொழுது நமக்கு நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் ஒரு உத்வேகம் வருவதோடு நம் சந்ததியினருக்கும் உறவுகளின் வலிமையும் அருமையும் உணர வாய்ப்பை அளிக்கும். உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏  

Thursday, December 4, 2025

#Victory King: எதிர்நோக்கும் தன்னம்பிக்கையுடன் வாழப் பழகுவோம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2425🥰  

மூதாதையர்கள் சொத்தும் இல்லாமல், நல்ல வசதியான பெற்றோர்களும் இல்லாமல், அரவணைத்து ஆறுதல் சொல்ல சொந்தங்களும் இல்லாமல் தனித்து நின்று வாழ்க்கையில் முன்னேறி தலைநிமிர்ந்து நிற்பவர்கள் தங்கள் எதிர்கால கவலை என்பதே இல்லாமல் எதையும் எதிர்நோக்கும் தன்னம்பிக்கையுடன் மகிழ்வுடன் வாழ முடியும். உணர்வோமே! 

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, December 2, 2025

#Victory King: நேர்மறை எண்ணங்கள் நமக்குள் ஐக்கியமாகட்டும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2424🥰  

மகிழ்ச்சி, உத்வேகம், தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் சக்தி, நன்றி உணர்வு, கருணை, மனச்சோர்வில் ஊக்கம், கடினமான சூழ்நிலைகளில் கூட மன உறுதி, இவைகள் அனைத்தையும் ஒருங்கே நமக்கு அளிப்பது நம்முடைய நேர்மறை எண்ணங்களே.எனவே நம்மை நாமே மெருகேற்றிக் கொள்ள"நேர்மறை" எண்ணங்களை நமக்குள் ஐக்கியமாக்கி மகிழ்வுடன் வாழ்வோமே!

🙏Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏