Wednesday, May 29, 2024

#Victory King: வசந்த வாழ்க்கை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2181🥰 

நாம் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காது வாழ்ந்தாலே அந்த வாழ்க்கை நமக்கு மகிழ்ச்சிதான். அதுபோல் நமக்கு யாரும் இல்லை என்று வருத்தப்படாமல் நாம் யாருக்கும் பாரமாக இல்லாமல் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறதே என்று மனதார நினைத்து மகிழ்ந்தால் அதுவே நம் வாழ்க்கையை வசந்தம் ஆக்கிவிடும். முயற்சிப்போமே!

🙏.Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, May 28, 2024

#Victory King: வாழ்க்கையின் நிதர்சனம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2180🥰 

பணம், பேராசை, அடுத்தவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி போன்ற போதைகளுக்கு அடிமையாகி நம் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற தாரக மந்திரத்தை நாம் உரு வெற்றிக் கொண்டு நம்மை நாமே புனிதமாக்கி கொண்டாலே போதும். இதுதான் நிதர்சனம்!

🙏.Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: மன அமைதிக்கான வழி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2179🥰 

ஒரு சிலர் தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று தவறாக நம்மிடம் பேசும் சமயங்களில் நாம் மௌனம் சாதிப்பது தான் மேல். ஏனென்றால் தெளிவான புரிதல் இல்லாமல் பேசுபவர்கள் நாம் சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்க மாட்டார்கள். எனவே மவுனமாக இருந்து விட்டால் வீண் தர்க்கத்தை தவிர்த்து நாம் மன உளைச்சலில் இருந்து விடுபடுவதோடு நம் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளமுடியும்

🙏.Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, May 25, 2024

#Victory King: வாழ்க்கை உளவியல்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2178🥰 

நாம் எதன் மீது அதிகம் கவனம் செலுத்துகிறோமோ அதன் தாக்கம் தான் அதிகரிக்கும். பிரச்சனைகளைப் பற்றியே அதிகம் சிந்தித்தால் பிரச்சனைகள் தான் மேலோங்கும். அதுபோல் நமக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைப் பற்றியே சிந்திக்கும் பொழுது நமக்கு அதற்கான வாய்ப்புகளை தந்து நம்மை மகிழ்விக்கும். இதுதான் உளவியல் உண்மை. உணர்ந்து வாழ்வோமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, May 24, 2024

#Victory King: நடிப்பு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2177🥰 

நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது ஓடி ஓடி வேலை செய்வது போல் பாவனை செய்து மற்றவர்கள் பார்வையை நம் மீது இழுப்பதற்கு முயற்சிக்காமல் அந்த செயலுக்காக ஆக்கபூர்வமாக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெறுவதுதான் நம் இதயத்திற்கு இதம். ஆத்மா சாந்தி. நாம் நமக்குஉண்மையாக செயல்பட்டு நம்மை நாமே தூய்மை படுத்திக் கொண்டு வாழ முயல்வோமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, May 22, 2024

#Victory King: ஓடம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2176🥰 

நிலையான நீரில் ஓடம் செல்லும்பொழுது தான் துடுப்பு நம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஓடுகின்ற ஆற்றில் ஓடம் செல்லும் பொழுது நீரோட்டத்தின் கட்டுப்பாட்டில்தான் ஓடம் செல்லும். இங்கே துடுப்பு செயலற்று போகும். அதுபோல்தான் நம் மனது ஒரு நிலையில் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்பொழுது தான் வாழ்க்கையையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். மனம் அலைபாய்ந்து ஓடிக்கொண்டேஇருந்தால் மனம் போன திசையிலே தான் வாழ்க்கை செல்லும். உணர்வோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

#Victory King: மானிடப் பிறவி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2175🥰 

 நாம் கிடைப்பதற்கு அரிய பெருமைமிகு மானிடப்பிறவி என்பதை உணர்ந்து, புறம் பேசி துரோகிகளாகி, கேவலமான ஜென்மமாக மாறிவிடாமல், நேர்மறையான எண்ணத்துடன் நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் பலன் ஏதாவது ஒரு வழியில் அது நமக்கு சாதகமாக திரும்பி வரும்  என்பதை மனதில் கொண்டு நல்லதையே சிந்தித்து நன்மைகளை சந்திப்போமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, May 18, 2024

#Victory King: ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2174🥰 

தங்கத்தைப் போல நிறம் கொண்ட பித்தளை தன்னையும் தங்கமாக நினைத்தும், வெள்ளியைப் போல நிறம் கொண்ட ஈயம் தன்னையும் வெள்ளியாக நினைத்தும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று பார்த்து ஏளனமாக நகைத்துக் கொள்ளுமாம்.அதைபோல மனிதர்கள் தங்கள் குறைகளை மறைப்பதற்காக மற்றவர்களை குறைகூறி இகழ்ந்து விமர்சிப்பது கேலிக்கூத்தான விஷயம் என்பதை உணர வேண்டும்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, May 16, 2024

#Victory King: எது வெற்றி!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2173🥰 

நம் அழைப்பிற்கு இணங்கி நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளில் நல்லவர்களுடன் கூட பொறாமை கொள்பவர்களும், புறம் பேசுபவர்களும் கூடவே வரத்தான் செய்வார்கள். அப்பொழுது நாம் அனைவரையும் ஒரு முகமாக அன்புடன் வரவேற்று உரிய மரியாதை செலுத்தி அனுப்புவதுதான் மனிதாபிமானம். அதுபோல் நம் வாழ்க்கையில் வரும் அழையா விருந்தாளிகள் தான் இன்பமும் துன்பமும். எனவே நம்மை நாடி வந்த துன்பத்தையும் சுமையாக கருதாமல் அதனை நம்மிடமிருந்து விலக்கி வாழ முயன்றாலே அது தான் நம் வாழ்க்கையின் வெற்றி!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Wednesday, May 15, 2024

#Victory King: எது அழகு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2172🥰 

நதியில் நீர் ஓடிக்கொண்டிருந்தால்தான் நதிக்கு அழகு. துளிர் விட்டு வளர்ந்தால்தான் செடிக்கு அழகு. மலர்ந்தால்தான் மலருக்கு அழகு. தோகை விரித்து ஆடினால்தான் மயிலுக்கு அழகு. துள்ளி குதித்து ஓடினால்தான் மானுக்கு அழகு. அதுபோல் உழைத்து வெற்றி பெற்றால்தான் மனிதனுக்கு அழகு!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Monday, May 13, 2024

#Victory King: நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2171🥰 

கூட்டிலிருந்து புறப்படும் பறவை இரை எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டு கிளம்புவதில்லை. ஆனால் திரும்பும் பொழுது இரையோடு கூட்டிற்கு வந்து தன் குஞ்சுகளை காப்பாற்றுகிறது. அது தான் அந்தப் பறவையின் தன்னம்பிக்கையோடு கூடிய முயற்சிக்கான வெற்றி. அதுபோல் நமக்கு ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் நம் மனதை பக்குவப்படுத்தி அதை ஒரு சவாலாக ஏற்று தன்னம்பிக்கையோடு முயன்று அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவருவதும் சாத்தியமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, May 9, 2024

#Victory King: உண்மை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2170🥰 

துரோகத்திற்கு துணை போய்,உண்மையை மூடி மறைக்கும் பொய்யர்களாகி, சூழ்ச்சி செய்து மற்றவர்களை ஏமாற்றுபவர்களை இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில், நன்றாக பேசி பழகுவதால் நமக்கு நல்லதே செய்வான் என்று எண்ணி நாம் முட்டாளாகமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அவர்கள் உண்மை நிலையை உணர்ந்து பழக முயற்சிப்போமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Tuesday, May 7, 2024

#Victory King: மனிதர்களும், அவர்களின் அருமையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2169🥰 

நாம் தேடித் தேடிப் போய் பேசுவதாலேயே சிலருக்கு நம் அருமை புரிவதில்லை. எனவே வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்தாலும் அதில் முக்கியமான ஒன்று எப்படி பழகனும், யாருடன் பழகனும், எந்த அளவுக்கு பழகும் என்பதுதான். இதனை நாம் உணர்ந்து வாழப்பழகிவிட்டாலே நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Saturday, May 4, 2024

#Victory King: பாச உணர்வு!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2168🥰 

கண்ணுக்குத் தெரியாத தென்றல் காற்று நம் இதயத்தை இதமாக்குகிறது. கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் நமக்கு ஒலியை கொடுக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வாசம் நம்மை சுண்டி இழுக்கிறது. அதுபோல்தான் கண்ணுக்கு தெரியாத பந்தம் என்ற பாச உணர்வுதான் நம் உறவுகளை ஒருங்கிணைக்கிறது. எனவே அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து உறவுகளை தக்க வைப்போமே.

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Friday, May 3, 2024

#Victory King: மற்றவர்கள் கருத்துகளும், நம் முடிவுகளும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2167🥰 

நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அதற்கான மற்றவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்பதில் தவறில்லை. ஆனால் அதனை செயல்படுத்தும் பொழுது நாம் எடுக்கும் முடிவு தான் இறுதியாக இருக்க வேண்டும். எனவே எண்ணங்களை சிதறவிடாமல் நாம் எண்ணியதை எண்ணியபடி முடித்தால்தால்தான் நம் கெளரவத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏

Thursday, May 2, 2024

#Victory King: நிகழ்ச்சிகளுக்கான அழைப்பும், மரியாதையும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி 2166🥰 

அழைப்பு என்பது உறவுகளை ஒருங்கிணைப்பதும், இளைய தலைமுறைகளுக்கு அதனை எடுத்துக்காட்டாக அமையச் செய்வதுமானதுமான உறவுச் சங்கிலியை வலுப்படுத்தும் அற்புத சக்தி. எனவேதான் குடும்பத்தில் எந்த சுப நிகழ்ச்சி நடந்தாலும், மற்ற நிகழ்வுகளானாலும்சரி உறவுகளை அழைப்பதும், தெரியப்படுத்துவதுமான ஒரு சம்பிரதாயம். உறவுகளின் வலிமையை உணர்ந்து செயல்படுவோமே!

🙏Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🙏