Monday, July 31, 2023

#Victory King: A contented mind is a continual feast

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2081🙏

பேராசை ஒரு மனிதனை மாயை உலகிற்கு அழைத்துச் சென்று புதைககுழியில் வீழ்த்தி தப்பிக்க முடியாமல் தத்தளிக்க வைத்து விடும். தற்புகழ்ச்சி தன்னையே பைத்தியக்காரனாக்கி நடுத்தெருவில் நின்று புலம்ப வைத்துவிடும். அதுபோல்தான் அளவுக்கு மீறிய பாசம் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் மனநோயாளியாகி உடலை சிறிது சிறிதாக அரிக்க ஆரம்பித்து விடும். எனவே "A contented mind is a continual feast"

உணர்வோமே!🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Friday, July 28, 2023

#Victory King: விஸ்வரூப பேச்சு!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2079🙏

பேசிப்புரிய வைக்க வேண்டிய விஷயத்தை பேசியே விஸ்வரூபம் எடுக்க செய்வதை விடுத்து பேச வேண்டிய விஷயத்தை மட்டும் பண்போடு பேசி அன்போடு அரவணைத்தால்பேசியவர்க்கும் பெருமை. பேசிய பேச்சுக்கும் உயிரளிக்கும். நா வன்மையை நளினமாக்கி நற்செயலுக்கு துணையாக நிற்போமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Thursday, July 27, 2023

#Victory King: வார்த்தைப் பிரயோகம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2078🙏

"எப்படியும் சமாளித்து விடலாம்" எப்படியும் இந்த செயலை முடித்து விடலாம் என்பது தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து பேசும் நியாயவாதிகள் உபயோகிக்கும் வார்த்தை. இதையே "தில்லுமுல்லு" செய்பவர்கள் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்ற உள்நோக்கில் தன் வார்த்தை ஜாலத்தால் இந்த வார்த்தையை பிரயோகப்படுத்துவார்கள். எனவே இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் தகுதியை இனம் கண்டு பார்த்துத்தான் இந்த வார்த்தைக்கான மதிப்பை நாம் கொடுக்க வேண்டும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Wednesday, July 26, 2023

#Victory King: கேள்விக்குறியாகும் வாழ்க்கை!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2077🙏

பொய்யைச் சொல்லி நாடகமாடி மிகவும் சாமர்த்தியமாக மற்றவர்களை ஏமாற்றி விட்டோம் என்று தன் தோளையே தானே தட்டிக் கொண்டு அக மகிழ்பவர்கள்  வாழ்க்கையில் அதுவே தொடர்கதையாகி ஒரு நிலையில் அவர்கள் சுயரூபம் தெரியும்போது தங்கள் மதிப்பு மரியாதையை இழந்து தலை தூக்க முடியாத நிலைதான் வந்தடையும் என்பதை உணர்ந்து தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறிதான்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Tuesday, July 25, 2023

#Victory King: சந்ததியினரின் எதிர்காலம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2076🙏

பசியால் வாடுபவனுக்குத் தான் தெரியும் உணவின் ருசி. உழைத்து சம்பாதித்தவனுக்குத்தான் தெரியும் பணத்தின் அருமை. எனவே நம் குடும்பம் தழைத்து இந்நிலைக்கு வருவதற்கு காரணமான நம் அனுபவங்களை நம் குடும்பத்தினர் அனைவருடன் பகிர்ந்து வாழ்ந்தால் மட்டுமே நம் சந்ததியினர் வருங்காலத்தில் கஷ்டப்படாமல் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்பதனை நாம் உணர வேண்டும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Monday, July 24, 2023

#Victory King: "தகுதி" என்ற மூன்றெழுத்து மந்திரம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2075🙏

ஏழையாய் பிறப்பது நம் கையில் இல்லை. ஆனால் அந்த ஏழ்மையிலேயே உழன்று கொண்டிருப்பது தான் நம் தவறு. "தகுதி" என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தகுதியையே மாற்றிவிடும். "தன்னம்பிக்கை குறிக்கோள் திறமை" இம்மூன்றையும் முறையே பயன்படுத்தி வாழ்க்கையில் நாம் முன்னேறினால் பிறப்பின் ஏழ்மை என்ற இலக்கணம் மாறி நம் வாழ்க்கையை நாமே பிரகாசிக்க செய்யலாம்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Sunday, July 23, 2023

#Victory King: மனதுக்கு சரி என பட்டதை செய்வோம்!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2074🙏

நமக்காகவே வாழ்ந்தால் அது சுயநலம். அடுத்தவர்களுக்காக நாம் வாழ்ந்தால் பச்சோந்திதனம். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஏமாளி. ஒதுங்கி நின்றால் பயந்தாங்கொள்ளி. எனவே நம் மனதிற்கு சரி என்று பட்டதை நேர்மையுடனும் தைரியத்துடனும் செயல்பட்டு வாழ்ந்தால் தான் நம் வாழ்க்கை மகிழ்வுடன் இருக்கும்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰

Tuesday, July 11, 2023

#Victory King: பாரபட்ச மோகம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2071🙏 

அனைத்து தர மக்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் பாரபட்சமின்றி பலன் அளிக்கும் விதத்தில் தான் மழை பொழிகறது. இயற்கை எப்பொழுதுமே நமக்கு பாரபட்சம் காண்பிப்பது இல்லை.ஆனால் ஏனோ நம்மிடத்தில் இன்றும் நம் குடும்பத்திலேயே ஆண் பெண், பாரபட்சம் சொந்த பிள்ளைகளாக இருந்தாலும் பொறாமையால், வெளியிலேஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற பாரபட்சங்கள் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை என்பதுதான் உண்மை. பாரதி பாடியது போல "என்று தனியும் இந்த பாரபட்ச மோகம்" என்று நாமும் பாட வேண்டிய நிலை தான் இன்று.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Sunday, July 9, 2023

#Victory King: நம் வாழ்வின் அணையா தீபஒளி!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2070🙏 

நாம் நல்ல எண்ணங்களை நம் இதயத்தில் அடைக்கலம் கொடுத்து விட்டால் நற்குணங்களாகிய பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகியவை நம்மைத் தேடி தானே வரும். இவை மூன்றும் நமக்கு கிடைத்து விட்டால் எதனையும்  சாதிக்கும் திறமை நம்மை வந்தடைந்து ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வை பெறுவோம். தூய எண்ணம் தான் நம் வாழ்வின் அணையா தீபஒளி!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Friday, July 7, 2023

#Victory King: உண்மையும் வாழ்க்கையும்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2069🙏 

உண்மைகள் நிராகரிக்கப்படலாம், வெறுக்கப்படலாம், ஒதுக்கப்படலாம், மறைக்கப்படலாம். ஆனால் நிச்சயம் ஒரு நாள் உண்மை வெளிப்படும். அப்பொழுது உண்மைதான் வெல்லும். உண்மையான வாழ்க்கைக்கு உயிர் உண்டு. உயர்வு உண்டு என்பதை உணர்ந்து வாழ்வோமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Thursday, July 6, 2023

#Victory King: காலை சுற்றிய பாம்பு கடிக்காது விடாது!

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2068🙏 

அடுத்தவர்களை மிகவும் புத்திசாலித்தனமாக ஏமாற்றி விட்டோம் என்று அகமகிழந்தால், "காலை சுற்றிய பாம்பு கடிக்காது விடாது". அதுபோல் நாம் ஏமாறும் காலம் வந்தே தீரும். ஏமாற்றியே பிழைத்தவர்கள் அதனை எதிர்கொள்ள சக்தியின்றி தத்தளிக்கத்தான் நேரும். உணர்வோமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Wednesday, July 5, 2023

#Victory King: நாம் நாமாக !

 🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2067🙏 

நேர்மையாக இருந்தால் நடிக்கிறான், உண்மையாக இருந்தால் ஊரை ஏமாற்றுகிறான், பாசத்தோடும் நேசத்தோடும் பழகினால் காக்கா பிடிக்கிறான் என்றெல்லாம் பொறாமை பிடித்த பண்பற்றவர்களின் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்காமல் நாம் நம் இயல்பான நற்குணங்களோடு வாழ்ந்தால் தான் வாழ்வில் நலம் பெறலாம்."நாம் நாமாக இருப்போமே".

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Monday, July 3, 2023

#Victory King: மனமும், சாட்சியும்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2066🙏 

பிறரை துன்புறுத்தி மகிழும் குணம் உடையவர்கள் அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தாலும் தங்கள் தவறை உணர மாட்டார்கள். அவர்கள் கொடிய விஷ ஜந்துக்களுக்கு சமம். ஆனால் மனசாட்சி உள்ளவர்கள் குற்றமே செய்தாலும் அதை ஒரு நிலையில் உணர்ந்து திருந்தி வாழவும் வாய்ப்பு உண்டு. எனவே நாம் மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து வாழலாம்.

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰 

Saturday, July 1, 2023

#Victory King: பேசிப் பழகுவோம்!

🙏விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி - 2065🙏 

அன்பிற்கு உரியவர்களிடம் மனம் திறந்து பேசலாம். ஆனால் மனதில் பட்டதை எல்லாம் பேசி அன்பிற்கு பங்கம் வரும்படி நடந்து விடக்கூடாது. ஏனென்றால் பேசினால் சண்டை வரும் என்று பேசாமல் இருக்கும் நிலை போய் இன்று பேசிப் பேசியே பிரிவினையை சந்திக்கும் நிலை வந்துவிடுகிறது. எனவே அனைவரிடமும் நிதானமுடன் பேசி நம் நிம்மதியையும் தக்க வைத்துக் கொண்டு நட்புடன் வாழ பழகுவோமே!

🥰Victory King Alias  'V. Krishnamurthy' (VK)🥰