Friday, June 27, 2025

#Victory King: "ஆளும் வளரணும் அறிவும் வளரணும்"

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2340🥰 

ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்பதல்ல வாழ்க்கை. "ஆளும் வளரணும் அறிவும் வளரணும்" அதற்கு நாம் முழுமையாக முயற்சி செய்து வெற்றி பெற்றால் தான்  அது வாழ்க்கையின் முதிர்ச்சி. அறிவு வளர்ந்தால் பண்பு வளரும். அந்தப் பண்புதான் நம் வாழ்வை வளம் பெற செய்து நம்மை நேர்வழிப்படுத்தும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, June 26, 2025

Victory King: எண்ணித்துணிக கருமம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2339🥰 

ஒருவர் இருக்கும் பொழுது அவரின் மகத்துவம் தெரியாமல்  நோகடித்து விட்டு அவரை இழந்தபின் உண்மையை உணர்ந்து வருந்தி என்ன பலன். நம் மனதிலிருந்து அதை அழிக்க முடியாத ஒரு கறை தான். எனவே  "எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு".

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, June 25, 2025

#Victory King: கடின உழைப்புக்கான பலன்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2338🥰 

இரவு பகலாக கடின உடல் உழைப்பை கொடுத்து பாதுகாத்த நெற்பயிறானது, அந்த அறுவடை நாளான்று நல்ல மகசூலை ஒரு விவசாயி காணும் பொழுது அந்த மகிழ்ச்சியில் அவரது பிரகாசமானமுகத்தை ஒப்பிட வேண்டுமென்றால், கருவை வயிற்றில் ஒன்பது மாதங்கள் சுமந்து அடைந்த வேதனைகளையும் சுகங்களாக அனுபவித்து தன் உயிரையே பணயம் வைத்து தன் குழந்தையை பெற்றெடுத்த அடுத்த நொடியே குழந்தையின் அழுகுரலையும் முகத்தையும் பார்த்தவுடன்  பரவசமுடன் மகிழும் அந்தத் தாயின் முகத்தோடு ஒப்பிட்டால் மிகையாகாது.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, June 16, 2025

#Victory King: குறைகளை உணர்ந்து திருந்துவரை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2337🥰 

அடுத்தவர்கள்விஷயத்தில் தலையிட்டு அலசி ஆராய்ந்து அவர்களின் குறைகளை மட்டுமே காண்பவன் தன்னிடம் உள்ள குறைகளை மறைப்பதாக நினைத்து தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொள்ளும் ஒரு யுக்தியே என்றாலும் அவர்கள் மனசாட்சி உறுத்ததிலிருந்து தப்ப முடியாது தங்கள் குறைகளை உணர்ந்து திருந்துவரை.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, June 15, 2025

#Victory King: நாம் ஒரு பாக்கியசாலியே!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2336🥰

உண்மையாக இருப்பதால் தான்  காயப்படுகிறோம், உரிமையுடன் பழகுவதால் தான் கோபப்படுகிறோம், நம் நேர்மை தான் நம்மை வெறுக்கச்செய்கிறது என்று  வேதனைப்படாமல் உண்மை பெருமைக்குரியது, உரிமை புரிதலின் புனிதம், நேர்மை நம் கௌரவத்தை காப்பாற்றும் கேடயம் என்று சிந்தித்துப் பார்த்தால் இவைகளை ஒருங்கே பெற்ற நாம் ஒரு பாக்கியசாலி என்பதை உணர முடியும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: உடலும் மனமும் சீராக!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2335🥰 

இருளில் அமர்ந்து கண்ணை திறந்து கொண்டு சிந்தித்தாலும், மூடிக்கொண்டு சிந்தித்தாலும் நம் நிழல் கூட நமக்கு உதவிக்கு வராது. மன அழுத்தம் தான் மிஞ்சும்.நாம் வெளிச்சத்திற்கு வந்து நாலு பேருடன் பேசி பழகும் பொழுது தான் நாம் மன அழுத்தத்திலிருந்தும் விடுபட்டு நம் சிந்தனைக்கும் விடை கிடைக்கும்.  இதயமும் இதமாகி உடல் நிலையை சீர்படுத்தி நம்மை நலமுடன் வாழ வைக்கும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, June 14, 2025

#Victory King: அனுபவிப்போம் வாழ்க்கையை நல்லவிதமாக!

🥰 விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2334🥰

அரிசி மாவில் புள்ளி வைத்து அந்த புள்ளிகளை இணைத்த அழகிய கோலங்கள் வீட்டு வாசலை அலங்கரித்து அதுபோல் வீட்டு உறுப்பினர்களும் அன்போடும் பாசத்தோடும் ஒருவருக்கொருவர் இணக்கமாகி மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் "positive vibration"உடனும் நாம் வசிக்கும் வீடு அமைந்து விட்டால்"positive energy" தானாகவே நம்மை சூழ்ந்து சொர்க்க வாழ்க்கையை நம்மால் அனுபவிக்க முடியும் பாக்கியம் இருந்தால்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏