Status 2021 (146)
நல்லவை பெருக பெரு முயற்சிகள் தேவையாக இருக்கிறது. தீயவை பெருக ஒரு சிறுதுளி முயற்சி இருந்தாலே அல்லது தீயவற்றை மனதால் நினைத்தால் கூட போதும். சர்வ வல்லமை படைத்ததாய் நம்மில் குடியேறிவிடும். ஒரு கட்டிடத்தை முழுமையாகக் கட்ட வேண்டும் என்றால் அதற்கான மனவலிமை முயற்சிகள் செயல்பாடுகள் என அத்தனை சக்திகளையும் நாம் பயன்படுத்தினால்தான் ஒரு முழுமை கிடைக்கும். ஆனால் அதை அழிப்பவனுக்கு சில மணி நேரங்கள் போதும். இயந்திரத்தை வைத்து இடித்துத் தள்ளிவிடுவார்கள். எனவே, நம் மனதில் எந்த நேரத்திலும் நப்பாசைக்குக் கூட தீய எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாமல் நன்மைகளுக்கு இடம் கொடுத்து நற்பலன்களைப் பெற்று நலமாக வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment