Status 2021 (141)
தம் வளர்ச்சியை விட மற்றவர்கள் வளர்ச்சியை உற்று நோக்குதலும், ஒவ்வொரு விஷயத்திலும் அடுத்தவர்களையே ஒப்பிட்டுப் பார்த்து அதனையே சிந்தித்து சிந்தித்து தன் தகுதிக்கேற்ற திறமையை அழித்துக்கொள்வதும் தான் மனித மனதின் பொறாமை என்னும் கொடுமையான நோய். அடுத்தவனுக்கு கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லை என்று பொறாமை படாத ஒரே விஷயம் இப்படிப்பட்டவர்களுக்கு மரணம்தான். எனவே இப்படிப்பட்ட மனோநிலை உள்ள உள்ளவர்கள் தனிமையில் சிந்தித்து தம் தகுதிக்கேற்ப தம் முன்னேற்றத்திற்கான வழியை சிந்தித்து செயல்பட்டால் தம் வாழ்க்கையில் முன்னேறி ஒளிமயமான நிகழ்காலமும் எதிர்காலமும் அமையும். பொறாமையை புறந்தள்ளுவோம் மகிழ்வுடன் வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment