Status 2021 (127)
நம் ஆசைகள் பெரியதாக இருந்தால் நமக்குக் கிடைப்பவை நம் எதிர்பார்ப்புகளைவிட குறைவாகவே இருப்பதாகத் தோன்றும். அது எவ்வளவு கிடைத்தாலும். மனித இயல்பு அது. ஆனால் நம் ஆசைகள் சிறியதாக இருக்கும்போது நமக்குக் கிடைப்பவை கொஞ்சமாகவே இருந்தாலும் அவை நம் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகவே இருக்கும். பூரணத் திருப்தியும் கிடைக்கும். எனவே, நமக்குக் கிடைப்பதை பெரிதாக நினைத்து பெருமையுடன் ஏற்று ஆத்ம திருப்தியுடன் வாழப் பழகுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment