Status 2021 (129)
நாம் மரணத்திற்கு பயப்படக்கூடாது. அதனை வெல்லும் சக்தி நமக்கு இல்லை. ஆனால் நாம் மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் பொழுது, துரோகம் செய்யும் பொழுது, அடுத்தவர்களை அழிக்க நினைக்கும் பொழுது, மற்றவர்களைப் பற்றி புறம் பேசும் பொழுது, சுயநலத்திற்காக பொய்யையே மூலதனமாக்கி தன்னை உயர்த்திக் கொள்ளும் பொழுது அந்த பயம் வர வேண்டும். இல்லையேல் நம் செயல்களே நம்மை அணு அணுவாக சீரழித்து கடைசியில் நம் வாழ்க்கையையே நாசமாக்கி விடும்.உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான். இதனை உணர்ந்தால் நமக்கு உண்டு நல்வாழ்வு!
Victory King (VK)
No comments:
Post a Comment