Status 2021 (130)
நாம் நம் எதிரியை தூக்கி எறிவது பெரிய செயலல்ல. ஆனால் அப்படி நாம் தூக்கி எறியும்முன்னர் அந்த நபரின் சகலத்தையும் அறிந்துகொண்டு, முடிந்தால் அவருடைய தவறை அவரே உணரச் செய்து, சாத்தியமிருந்தால் திருந்தச் செய்து, எதுவுமே முடியாதபட்சத்தில் பிற்காலத்தில் அவரால் நமக்கு எந்த பிரச்சனையும் வராத அளவுக்கு விவேகத்துடன் தூக்கி எறிய வேண்டும். இல்லை என்றால் நாம் தூக்கி எறியும் ஒரு நபர் பலமடங்காகப் பெருகி நம்மை எதிர்க்க திட்டம் தீட்ட வாய்ப்புண்டு. ஒருவரை தூக்கி எறிய முடிவெடுத்துவிட்டால் அவரால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அவர் தன் பலமாக எதை நினைத்துக்கொண்டிருக்கிறாரோ அதை பலவீனமாக்கி அவரால் நிமிரவே முடியாது என்ற நிலையை உருவாக்க நாம் மனதளவில் தயாராக வேண்டும்.
Victory King (VK)
Wednesday, May 12, 2021
எதிரியின் பலம் அறிவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment