Status 2021 (123)
தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான். நாம் செய்யும் தவறை நியாயப்படுத்தி விட முடியாது. அடுத்தவர் தவறு செய்தாலும் நாம் தவறு செய்தாலும் தவறை உணர்ந்து திருந்தி வாழ முயல வேண்டும். தவறு செய்துவிட்டு நியாயப்படுத்தி தங்களை மேதாவிகளாக நினைத்து வாழ்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையே தவறாக தான் முடியும். எனவே அடுத்தவர்கள் தவறு செய்யும்போது நீதிபதியாகவும் நாம் தவறு செய்யும் போது நியாயவாதி ஆகவும் இருந்து நம்மை நாமே ஏமாற்றி கொள்ளாமல் நம் தவறை ஒத்துக்கொண்டு மீண்டும் நம்மை தூய்மைப்படுத்தி வாழ முயல்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment