Friday, May 14, 2021

வளைந்து கொடுப்பதும், விட்டுக்கொடுப்பதும்!

Status 2021 (132)

வாழ்க்கை என்பது, நாணல் போன்றது; சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பலருக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுப்பதற்கும், முற்றிலும் முறிந்து போகும் அளவிற்கு வளைந்து கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சூழலுக்கு ஏற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம் தான். அதன் எல்லை எதுவரை என்றும் தெரிந்து வைத்துக் கொள்வது அதைவிட முக்கியம்.  பக்குவப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொண்டு முற்றிலும் நம்மைத் தொலைத்து விடக் கூடாது. தீய சூழலுக்குள் நாம் தொலைந்து விடாமல் இருக்கும் சூட்சுமம் நம் கைகளில் தான் உள்ளது. 

Victory King (VK)

No comments: