Status 2021 (145)
எப்பொழுது வரும் நம் வாழ்க்கையின் இயல்பு நிலை. வருத்தம் மிகுந்து முடங்கி தவிப்பதும் உண்ணுவதும் உறங்குவதும் மட்டுமே இயல்பாகி எப்பொழுதும் சலிப்பான மனம் வெறிச்சோடிய முகம் வெறுப்பான பேச்சு நம் வீட்டிற்குள்ளேயே நாம் முடங்கி கிடக்கும் சிறைவாசம் இவைகள்தான் இன்று நம்முடைய நிலை. உப்பு இருந்தால் தானே உணவு சுவைக்கும் அதுபோல மனதில் மகிழ்வு இருந்தால்தானே வாழ்க்கை இனிக்கும். எனவே இந்நிலையில் நாம் மனம் தளராமல் உறுதியுடன் இருந்து நம் மனதை மகிழ்வோடு வைத்துக்கொள்ள ஆக்கப்பூர்வமாகவும் ஈடுபாடுடனும் நமக்கு பிடித்த செயல்களை செய்தும் நமது பழைய கால இனிய நினைவலைகளை நினைத்து மகிழ்ந்தும் நம் கவலைகளை மறந்து மகிழ்வுடன் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment