Status 2021 (142)
நாம் 60 வயதை தாண்டிவிட்டால் நாம் முதுமையை புரிந்துகொண்டு நம் அகங்காரத்தை அழித்து பிடிவாதத்தை புறக்கணித்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கடவுள் பக்தியை மேம்படுத்திக்கொண்டு சிரிக்கக் கற்றுக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு உடல் பலவீனமானாலும் உள்ளத்தை உறுதி படுத்திக்கொண்டு நாம் வாழ்ந்த வாழ்க்கை அனுபவத்தை மனதில் நினைவுபடுத்தி மகிழ்ந்து அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ பழக வேண்டும். யார் திட்டினாலும் சிரிக்க கற்றுக்கொண்டு நாம் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் நம்மைப் பார்த்து குற்றம் குறை கூறினாலும் பொறுமை காத்து மனதளவில் நாம் மன்னிக்க கற்றுக் கொண்டுவிட்டால் நமக்கு வயது ஒரு பொருட்டல்ல. முயற்சித்து தான் பார்ப்போமே.
Victory King (VK)
No comments:
Post a Comment