Status 2021 (133)
நம்முடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் நம் துன்பங்கள் மட்டும்தான் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்படும் துன்பங்களினால் கஷ்டங்களும் வலிகளும் நமக்கு உண்டாவது உண்மைதான். அந்த துன்பங்களை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற எண்ணத்தினாலேயே அவை கொடுக்கும் வலி அதிகமாகிறது. மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய இமேஜை வளர்த்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் நாம் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போது அதில் இருந்து வெளிவர யோசிப்பதைவிட மற்றவர்கள் நம்மை எப்படி நினைப்பார்கள் என்று யோசித்து யோசித்தே நம் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வளர்கின்றன. யாரும் பார்க்கவில்லை என்றாலோ அல்லது யாரேனும் பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவில்லை என்றாலோ எதிர்மறை எண்ணங்கள் வளர்ந்துகொண்டே போகாது. முயற்சிப்போமே!
Victory King (VK)
Sunday, May 16, 2021
பிரச்சனைகளில் இருந்து விடுபட!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment