Status 2021 (136)
தவறு செய்வது என்பது ஒரு குற்றமாகாது. ஆனால் அது ஒரு தொடர்கதை ஆகும் பொழுதுதான் குற்றத்தில் கொண்டு விடுகிறது. தவறுகள் பல விதம். தெரியாமல் செய்வது. புரியாமல் செய்வது. தெரிந்தே செய்வது. இதில் நாம் தெரியாமல் செய்த தவறை உணர்ந்தபின் நம்மை திருத்திக் கொள்வதும் புரியாமல் செய்த தவறை அதைப் பற்றி நன்கு புரிந்தபின் சரியாக செய்வதும் நம்மை நாம் பண்படுத்திக்கொள்ளும் வழியாகும். ஒரு தவறை தெரிந்தே செய்து அதனையே நியாயப்படுத்தி மேலும் மேலும் தவறுகளையே செய்து கொண்டே இருக்கும் பொழுதுதான் நாம் செய்யும் எல்லா குற்றங்களுக்கும் மூல காரணமாகிறது. இத்தகைய நிலை வரும் பொழுது நாம் அதிலிருந்து விடுபட முடியாமல் நாம் நம் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்கிறோம். எனவே நாம் செய்யும் தவறை உணர்ந்தபின் திருந்தி நம்மை நாம் பண்படுத்திக் கொண்டு வாழ்வோமே!!!
Victory King (VK)
No comments:
Post a Comment