Status 2021 (137)
வெற்றிக்கு நம் முதலீடு தொடர் முயற்சி தான். தேனிக்களின் தொடர் முயற்சியினால்தான் நமக்கு சுவையான தேன் கிடைக்கிறது. விதி நம் முயற்சிகளுக்கு பல தடைகளை ஏற்படுத்தினாலும் நாம் தொடர்ந்து முயற்சித்தோமேயானால் ஏதோ ஒரு மூலையில் நமது வெற்றிக்கான பாதையை காண்பித்து நம்மை வெற்றி அடைய செய்து விடும். அடுத்தவர்களை போல் நமக்கு வெற்றி உடனே கிடைக்கவில்லை என்று வருந்தாமல் தொடர்ந்து முயற்சித்தால் நம் திறமைக்கான வெற்றி நம்மை வந்து அடைந்தே தீரும். எதற்கும் மனம் தளராமல் தடைகளை கண்டு அஞ்சாமல் முழு மனதுடன் முயற்சித்து எடுத்த நியாயமான செயலில் வெற்றி அடைந்து மகிழ்ந்து வாழ்வோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment