Status 2021 (132)
என்று தணியும் இந்த வைரஸின் வேகம், என்று முடியும் இந்த நம் வாழ்க்கையின் சோகம்? என்று பாரதிபோல் பாடத் தோன்றினாலும் எந்த நிலையிலும் எந்த சூழலையும் சமாளிக்கும் மனப்பக்குவத்துடன் அஞ்சுவதை விடுத்து அஞ்சா நெஞ்சத்துடன் இதுவும் கடந்து போகும், நாம் அனைவரும் பழைய வாழ்க்கையை விரைவில் சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டது என்று மனதார எப்பொழுதும் நினைத்து வந்தாலே நமது மனச்சுமை நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும். வருந்தி வருந்தி அழைத்து விருந்தோம்பல் செய்த நமக்கா இந்த நிலை என்று எண்ணுவதை விடுத்து அந்த நாள் மீண்டும் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று மனதார எண்ணி மகிழ்ந்து நம்மை நாமே புத்துணர்ச்சி செய்துகொண்டு வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment