Sunday, May 30, 2021

பாசம்!

 Status 2021 (146)

மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன் எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டிப் போகின்றது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறது இமைகள் அதை மறைக்கிறது. இந்தப்பாடல் வரிகளை அன்புள்ள அப்பா அம்மாவில் சிவாஜி கணேசன் மகளிடம் உள்ள பாசத்தை தத்துரூபமாக காட்சிப்படுத்தி இருப்பார். பாசம் என்பது நம் ஆழ்மனதிலிருந்து நம்மையும் மீறி வரக்கூடிய ஒரு உணர்வு என்பதற்கு இதுவே ஒரு சான்று. எனவே நாம் பாசத்தையும் நேசத்தையும் வளர்த்துக்கொண்டு அன்பான வாழ்வை அடைவோமே!

Victory King (VK)

No comments: