Monday, May 10, 2021

விருந்தோம்பல்!

 Status 2021 (129)

விருந்தோம்பல் என்பது ஏதோ நண்பர்களையும் உறவுகளையும் அழைத்து உபசரிப்பது என்ற ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல.பகையை முறிக்கும் ஆற்றல் பெற்றது! நட்பை வளர்க்கும் சக்தி வாய்ந்தது! உறவுமுறைகளை பின்னிப் பிணைக்கும் பாலம்! தலை முறைகளை இணைக்கும் உறவுச் சங்கிலி! தலைமுறை இடைவெளியை குறைக்கும் மேஜிக்! வருபவர்களை அன்போடு வரவேற்று பண்போடு பேசி உள்ளன்போடு உபசரித்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நினைவலைகளை பகிர்ந்து உரையாடி உளம் மகிழ்ந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் அருமை பெருமை தெரியும். எனவே அத்தகைய சந்தர்ப்பங்களை அடிக்கடி ஏற்படுத்தி மகிழ்ந்து வாழ்வோமே!

Victory King (VK)

No comments: