Status 2021 (140)
பயம் என்பது நமது உணர்ச்சிகளில் ஒன்று. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த உணர்வானது ஒவ்வொரு விதத்தில் வரும். குழந்தைகள் பயப்படும் பொழுது நாம் அவர்கள் பயத்தை போக்குவதற்கு சில யுக்திகளை கையாளுவோம். நாம் வளர வளர நாம் நம் மனோதிடத்தை வளர்த்து அந்த பயத்தை போக்க முயற்சிப்போம். இத்தகைய பயத்தை நாம் எதிர் கொள்வது எளிது. ஆனால் ஒருவர் தவறு செய்யும் பொழுதும் அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யும் பொழுதும் சற்றும் குற்ற உணர்வில்லாமல் தார்மீக பயம் இல்லாது செயல்படுபவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களுடைய செயல்பாடுகளே அவர்களை அழித்துவிடும்.எனவே பயம் என்ற உணர்வை மனோதிடத்தோடு எதிர்கொண்டு தார்மீக பயத்தோடு நாம் வாழ்வோமேயானால் இறுதிவரை மகிழ்வோடு வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment