Status 2021 (134)
இன்று இயற்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் தான் என்ன? நாம் காடுகளை தொலைத்தோம் மரங்களை அழித்தோம், குளம் குட்டைகளை தரை மட்டமாக்கி விண்ணை முட்டும் கட்டிடங்கள் கட்டினோம், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக பயன்படுத்தாதிருந்தோம், நிலத்தடி நீரை முழுமையாக உறுஞ்சி எடுத்தோம், பூமித்தாயின் நாவினை வரட்டினோம், சுற்றுச்சூழலை முறையாக பயன்படுத்த கவனமின்றி இருந்தோம். அதன் பலன்தான் இன்று நாம் இயற்கையால் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை. ஒன்றை மட்டும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இயற்கைக்காகட்டும் ஒரு தனிமனிதனுக்காகட்டும் நாம் செய்யும் துரோகம் நம்மையே வந்து அடையும என்று.எனவே நாம் மனிதநேயத்தோடு உயிரற்றவை உயிருள்ளவை என்ற பாகுபாடின்றி அனைத்திற்கும் அதற்கான மதிப்பைக் கொடுத்து வாழப் பழகுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment