Status 2021 (125)
வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதிலோ அல்லது மாற்றி சிந்திக்க வேண்டும் என நினைத்துப் புதுமைகளை செய்ய விரும்புவதிலோ தவறில்லை. ஆனால் அப்படி செய்யப்படும் விஷயங்கள் உண்மையிலேயே புதுமையாக இருந்தால் அவை தானாகவே மற்றவர்கள் பார்வைக்குப் புதுமையாகவே சென்றடையும். தான் செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களையும் தான் மட்டுமே புதுமையாக செய்வதாகவும், உலகிலேயே அப்படிப்பட்ட புதுமைகளை வேறு யாருமே செய்திருக்கமாட்டார்கள் என்றும் சுய பெருமை பேசுவது நாளடைவில் சலிப்பையே ஏற்படுத்தும். எனவே எதையும் பெருமைக்காக செய்யாமல் இயல்பாக செய்து நம் திறமையை வெளிப்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவதே பெருமை!
Victory King (VK)
No comments:
Post a Comment