Status 2021 (97)
நாம் நம்மைவிட மேலே உள்ளவர்களை பார்க்கும் பொழுது பொறாமைப்படக்கூடாது. அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு அது போன்று நாமும் வரவேண்டும் என்று எண்ண எழுச்சியில் செயல்பட்டு வெற்றி அடைய வேண்டும். அதுபோல் நம்மைவிட தாழ்ந்தவர்களை பார்க்கும் பொழுது நமக்கு தலைகனம் ஏறக்கூடாது. அவர்களைவிட எவ்வளவு வசதியாக இருக்கிறோம் என்று பெருமைப்பட்டு மகிழ்ந்து கொண்டு நம் முன்னேற்றத்தை மேலும் முடுக்கிவிடவேண்டும். அவ்வாறு செய்தால் அது நம் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தி நமக்கு மகுடம்சூட்டிவிடும். எனவே நாம் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வாழ்க்கையில் நலம் பெறுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment