Status 2021 (94)
நாம் எல்லா தவறுகளையும் செய்து விட்டு அலங்காரப் பேச்சினாலும் அரிதாரம் பூசப்பட்ட முகத்தினாலும் நாம் யோக்கியன் என்று மற்றவர்களை வேண்டுமானால் நம்ப வைக்கலாம். ஆனால் நம் மனசாட்சி மட்டும் நம்பவே நம்பாது. அப்படியே நம் உண்மை வெளிப்பட்டு விட்டால் பொய் சாட்சிகளை அலங்காரம் பண்ணி அதனை அடக்க முயற்சிக்கலாம். ஆனால் நம் மனசாட்சி நம்மை சும்மா விடாது. அது ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மீதே அவதாரமெடுத்து நம் வாயாலேயே உண்மைகளை ஒப்புக் கொள்ள வைத்துவிடும். நம் மனசாட்சி உறங்குகிறது என்று நினைத்துக்கொண்டு தவறுகளை செய்து கொண்டே இருந்தால் அது நம்மையே சுற்றி சுற்றி வந்து நம்மை அழித்துவிடும். எனவே நாம் மனசாட்சிக்கு பயந்து தவறுகள் செய்யாது வாழ்ந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment