Status 2021 (101)
மற்றவர்கள் நம் பொறுமையை கேவலமாக்கும் போதும் நம் அன்பை அசிங்கப்படுத்தும் போதும் அமைதி காப்பது அவர்களை தூக்கி வீச தெரியாமல் அல்ல. பொறுமையாக இருந்து அவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கத்தான். நாம் அமைதி காத்தும் அவர்கள் திருந்தாதோடு மட்டுமல்லாமல் நம்மை முட்டாள் என்று எண்ணி மேலும் மேலும் நம்மை கேவலப்படுத்தும் பொழுது, நாம் வெகுண்டு எழுந்தால் அவர்களால் அதன் வேகத்தை தாங்க முடியாமல் தூள் தூள் ஆகிவிடுவார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு, அமைதிக்கும் அளவுண்டு என்பதை அவர்கள் உணர்ந்தால் நல்வாழ்வு உண்டு இல்லையேல் அவர்கள் செய்த பாவத்திற்கு பரிகாரம் அழிவுதான். அறம் காப்போம் அமைதி காப்போம் இறையருள் பெற்று நலமுடன் வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment