Status 2021 (107)
வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து தன்னுடைய திறமையை கண்டறிந்து அதனை முறையாக வெளிப்படுத்தி ஒரு சிறந்த நாகரிக நகைச்சுவை நடிகராகவும் பொதுநல பார்வையுடனும் சமூகத்தில் ஒரு அந்தஸ்தை பெற்று கடைசிவரையில் அதனை நிலைநாட்டி வாழ்ந்து காட்டிய ஒரு சிறந்த பண்பாளர் சிறந்த மனிதர் இன்று நம்மை விட்டு பிரிந்த விவேக். இரண்டு நாட்கள் முன்பு நாம் பார்த்த விவேக் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் புகழ் உலகளாவி உள்ளது. இறந்த பிறகும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விவேகின் மரணம்தான் முன்னுதாரணம். இதனை பார்த்த பிறகாவது திருந்தாத ஜென்மங்கள் திருந்தி வாழ்ந்தால் நல்லது. எனவே நமக்கு கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை பெருமையுடன் வாழ்ந்து இறந்த பிறகும் அழியாப் புகழோடு விளங்க முனைவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment