Thursday, April 1, 2021

ஆலோசனைகள் பயனுள்ளதாக அமைய!

 Status 2021 (91)

மற்றவர்களுக்கு நாம் ஆலோசனை கூறும் பொழுது மிகவும் கவனத்துடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க வேண்டும். அவர்களாக நம்மிடம் ஆலோசனை கேட்டால் ஒழிய நாம் அதில் தலையிடக் கூடாது. மற்றவர்கள் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தார் போல் நம் ஆலோசனை இருக்கக்கூடாது. அப்படி செய்யக்கூடாது இப்படி செய்யக்கூடாது என்று எதிர்மறையாக கூறுவதை விடுத்து என்ன செய்தால் நல்லது என்பதை எடுத்துரைக்க வேண்டும். முறையாக நாம் செய்யாவிட்டால் அது மற்றவர்களை மேலும் பாதிக்கும். எனவே நம்மால் ஆலோசனை பெறுபவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாவண்ணம் தகுந்த ஆலோசனையை கொடுத்து குழம்பி வந்தவர்களுக்கு பலத்தைக் கொடுத்து மகிழ வைக்க வேண்டும். அது தான் நமக்கும் ஆத்மதிருப்தி ஆகும்.

Victory King (VK)

No comments: