Status 2021 (103)
தெரிந்தே ஒருவர் பிழைசெய்வதும் அதனையே சாதிப்பதும், தவறை உணர மறுப்பதும் நேர்மையின்மை ஆகும். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒருவர் தனது கருத்துக்களையும் செயல்பாடுகளையும் மாற்றிகொள்வதும், அதனையே நியாயமென கூற முனைதலும் கூட நேர்மையின்மையின்மைதான். நேர்மையாக இருந்து எதை சாதித்து விட்டாய் என்று தர்க்கவாதிகள் நம்மிடம் கேட்கும்பொழுது நாம் தைரியமாக சொல்ல வேண்டும், நேர்மையாக இருப்பதே பெரிய சாதனைதான் என்று. சொல்லில் நேர்மை இல்லையென்றால் செல்லாக்காசாகிவிடுவோம். செயலில் நேர்மை இல்லை என்றால் எல்லோராலும் தூற்றப்படுவோம். நேர்மை ஒன்றுதான் நம்மை வாழ்நாள் முழுவதும் நம் கூடவே இருந்து நம்மை காப்பாற்றி தலைநிமிர்ந்து நடக்க வைக்கும். சொல் செயல் அனைத்திலும் நேர்மையைக் கடைபிடிப்போம். தலைகுனிவை தவிர்ப்போம்!
Victory King (VK)
No comments:
Post a Comment