Status 2021 (117)
நாம் ஒருவருக்கு ஆலோசனை சொல்லும் பொழுது எதிராளியின் குணமறிந்து திறனறிந்து சொல்ல வேண்டும். அதிலும் எதிராளிக்கு நாம் ஆலோசனை கூறும் அளவிற்கு நமக்கு தகுதி இருக்கிறதா என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியே ஆலோசனை கூறும் பொழுது ஆலோசனை பெறுபவர்கள் மனம் புண்படாமலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராத படியும் பண்போடு பகிர்ந்து அவரை பக்குவப்படுத்த வேண்டும். எனவே ஆலோசனை என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் எதுவும் சொல்ல முடியுமானால் சொல்லலாம். இல்லையேல் அவர்கள் கூறும் குறைகளை காதுகளால் கேட்டு மௌனம் சாதிப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் பேர் உதவியாகும்!
Victory King (VK)
No comments:
Post a Comment