Status 2021 (105)
அன்பு பாசம் நேர்மை அனைத்தையும் நம்மிடம் வைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் அதை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் மற்றவர்கள் அதற்குத் தகுதியானவர்களா என்று யோசித்து எதிர்பார்க்க வேண்டும். இல்லையேல் எதிர்பார்த்து தோற்று விட்டோமே மன உளைச்சல் நமக்குத்தான் இருக்குமே ஒழிய அவர்கள் அதை சிறிதும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள். எதிர்பார்ப்பு என்பது ஒரு மகிழ்வான செயல்தான். நாம் ஒன்றை எதிர்பார்த்து அது நடந்துவிட்டால் நாம் அந்த சமயத்தில் மகிழ்வதை விட அதனை எதிர் பார்த்த பொழுது கிடைத்த மகிழ்ச்சிதான் பெரிதாக இருக்கும். எனவே எதிர்பார்ப்பு என்பது நம் உள்ளக் கிளர்ச்சிக்கு உடல் ஆரோக்கியத்திற்கு புத்துணர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். நம் தகுதிக்கேற்ப திறமைக்கேற்ப எதனையும் எதிர்பார்த்து செயல்பட்டால் அதில் வெற்றி என்பது நிச்சயம். முயற்சிப்போம் முன்னேறுவோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment