Status 2021 (102)
கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது. கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிற போதெல்லாமல் நம்பிக்கையுடனும், உற்சாகமாய் எழுந்துவிடுங்கள் பீனிக்ஸ் பறவையைப் போல். கவலையை நம் உள்ளத்திலே வைத்து பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாகச் சோர்வு, தோல்வி மனப்பான்மை, வாழ்க்கையின் மேல் விரக்தி முதலியவைகள் உண்டாகும். எனவே கவலையை உச்சகட்டத்திற்கு செல்லவிடாமல் நம் நம்பிக்கைக்குரிய நெருங்கிய உறவினர்களிடமோ நண்பர்களிடமோ மனம் விட்டுப் பேசியோ, நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் மனதை முழுமையாக செலுத்தியோ கவலையைத் திசை மாற்றி மறக்கச் செய்யலாம். நம் மனதால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. முயற்சித்துத்தான் பார்ப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment