Sunday, August 24, 2025

# Victory King : முள்ளும் மலர!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2377🥰

நாம் காலை தெரியாமல் முள்ளின்மேல் வைத்து குத்திக் கொண்டு விட்டு காலில் முள் குத்திவிட்டதுவிட்டது என்று சொல்வது போல்தான் நாம் சென்ற இடத்தில் நமக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வதும். மரியாதை கிடைக்காத இடத்திற்கு நாம் சென்றதுதான் தவறு. இது போல் தான் நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்து விட்டு சமயத்தில் அவமானப்படும் நிலை வந்து விடுகிறது. தவிர்க்க முயற்சிப்போமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, August 23, 2025

#Victory King : திருந்துவதற்கான வாய்ப்பு!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2376🥰

உபயோகமில்லாத பொருட்களையே தூக்கி போடாமல் பாதுகாக்கும் மனம் உடையவர்கள் சிலர், நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் கூட நட்பையும் பாசத்தையும் பண்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல்  தூக்கி எறிந்து பேசி அவர்கள் மனதை புண்படச் செய்பவர்கள், இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை யாருமே நிரந்தரம் இல்லை என்ற தத்துவத்தை உணர்ந்தாலே போதும். திருந்துவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, August 20, 2025

#Victory King: செயல் வேகத்துடன் விவேகமும் சேரட்டும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2375🥰 

நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அதை நாம் துரிதப்படுத்த வேகத்தை மட்டும் காண்பித்தால்  அது நம் செயல்திறனை சிதற வைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதை யே விவேகத்துடன் சிந்தித்து துரிதமாக செயல்படும் பொழுது நம் செயல் திறன் சிறப்பாக அமையும். எனவே நமது செயல் வேகத்துடன் விவேகமும்  சேர்ந்தால்தான் சிறப்பு என்பதை உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, August 18, 2025

#Victory King : நம் வாழ்க்கைக்கு நல்வழி!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2374🥰 

மனத்தெளிவோடு நேர் வழியில் நாம் ஒரு குறிக்கோளை நோக்கி பயணம் செய்யும் பொழுது இடையில் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் நடந்தாலும் அதனை பொருட்படுத்தாது நாம் நாமாகவே இருந்து குறிக்கோளை எட்டிப் பிடிக்கும் வரை முழு முயற்சியுடன் முயன்று நகர்ந்து கொண்டே இருந்தால் நாம் எண்ணியது நடந்தே தீரும். நேர்வழி நம்மை என்றும் கைவிடாது. அதுதான் நம் வாழ்க்கைக்கு நல்வழி.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, August 17, 2025

# Victory King: நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2372🥰 

நாம் பேசும் வார்த்தைகளுக்கு நாம் பொறுப்பேற்கலாம். ஆனால் அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்க்கெ ல்லாம் நாம்  பொறுப்பல்ல. அன்போடும் பாசத்தோடும் சேர்ந்து ஒருவருக்கொருவர் புரிதலும் இருந்தால் மட்டுமே உறவுகளும் நட்புகளும் நிலைக்கும். எனவே புரிதலின் மகத்துவத்தை உணர்ந்து நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி அமைதியை நிலைக்கச் செய்து மகிழ்ந்து வாழ்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, August 16, 2025

#Victory King: அறிவுரைகள்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2371🥰 

வயிறு புடைக்க புல்லை மேய்ந்து அசதியில் நின்று கொண்டிருக்கும் மாடு, பசியில் கிடைத்த புல்லை மேயும் மாட்டிடம்  சென்று நக்கி கொடுக்கும்போது, தன் பசியை கூட பொருட்படுத்தாது மேய்வதை நிறுத்திவிட்டு அந்த சுகத்திலேயே திளைத்துவிடும். அதுபோல் நம் நிலையை புரிந்து கொண்டு சில பொழுது போகாதவர்கள் அட்வைஸ் என்ற பெயரில் நம்மை குழப்பும் பொழுது நாம் அதை புறக்கணித்து அடுத்தவர்களுக்காக வாழ முயலாமல்  நமக்காகவே நாம் வாழ்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, August 15, 2025

#Victory King: வரம்பை மீறினால் !

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2370🥰 

அடுத்தவர்களைப் பற்றி அதிகம் அறி வதையும், நம்மைப் பற்றி அதிகம் பகிர்வதையும் நாம் தவிர்க்காவிட்டால் ஒரு நிலையில் அதுவே நம் நிம்மதியை கெடுத்து விடும். எதுவுமே ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும். வரம்பை மீறினால் வீண் வம்பும் வேதனையும் தான் மிஞ்சும். எனவே நம் எல்லையை நாம் உணர்ந்து ஒருவருக்கொருவர் இடையே உள்ள புரிதலை புனிதமாக்குவோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, August 14, 2025

# Victory King : விட்டுப் பிடித்தால் விடை கிடைக்கும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2369🥰 

நம்மால் தீர்க்க முடியாது என்று முடிவு செய்த ஒரு பிரச்சனையை மனதிற்குள்ளேயே போட்டு மீண்டும் மீண்டும் அதைப்பற்றி சிந்திப்பதுதான் நம் மன அழுத்தத்திற்கு மூல காரணம். "விட்டுப் பிடித்தால் விடை கிடைக்கும்". எனவே நாம் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவரும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் நம் தெளிவான மனநிலையில் ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்கும். முயற்சிப்போமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, August 13, 2025

# Victory King : உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் !

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2368🥰 

நாம் கரடு முரடான சாலைகளை கடக்கும் பொழுது மேடு பள்ளம் பார்த்து நிதானத்துடன் கடப்பது போல் தான், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் மத்தியில்,போலி புன்னகையில் பொய் பேசி நடிப்பவர்கள் மத்தியில், பிறரை நம்ப வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் மத்தியில் நாம் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. அவர்களை இனம் கண்டு சாதுரியமாக சமாளித்துதான் நம் வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, August 12, 2025

#Victory King : பார்ப்பவன் கண்ணில் பிழை இருந்தால் !

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2367🥰 

ஒரு காலத்தில் மதிப்பு இருந்த நீதி, நேர்மை, நியாயம், மனசாட்சிகள் இவைகள் அனைத்தும் இன்று பணத்திற்கும் சுயநலத்திற்கும் விலை போன பிறகு நாம் மட்டும் நியாயமாக இருந்தால் நம்மை சுயநலவாதிகள் என்று ஓலமிடும் ஓநாய்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நாம் நியாயத்தின் பக்கமே நின்று நம் மதிப்பை காப்பாற்றிக் கொள்வோமே! "பார்ப்பவன் கண்ணில் பிழை இருந்தால் பிம்பமும் பிழையாகத் தானே தெரியும்"

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, August 11, 2025

#Victory King : சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2366🥰 

ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து மனதிற்குள்ளேயே தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல். அதுபோல் அதிகம் பேசி ஒரு நிலையில் ஒருவர் கூறுவதை மற்றொருவர் தவறாக புரிந்து கொண்டு பகைமையை வளர்த்துக் கொள்ளுதல். இவை இரண்டும்தான் பகைமைக்கு மூல காரணம்."சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்". பகைமையை தவிர்க்க இதை கடைபிடிக்கலாமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, August 10, 2025

Victory King: வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2365🥰 

நாம் சகல வசதிகளுடன் மகிழ்வுடன் வாழ்ந்தாலும் ஆணவத்தில் ஆடுகிறான் என்றும், நன்கு வாழ்ந்து ஒரு நிலையில்  தாழ்ந்து விட்டால்  நம்மை கேவலமாக பார்த்து தூற்றும் உலகம் இது. எனவே"தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் புழுதிக்கே"என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் நம்மை நாமே உளியாக்கி நம்மை செதுக்கிக் கொண்டு நம் வாழ்வை நமக்காகவே வாழ்ந்திடுவோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, August 9, 2025

# Victory King : அன்பும் பாசமும்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2364🥰  

அன்பும் பாசமும் ஒன்றோடு ஒன்று இணைந்து மகிழ்ந்து வாழும் பக்குவப்பட்ட இடமே குடும்பம் எனும் கோயில். அங்கே உறவுகளோடு உள்ளன்புடன் உறவாடி குதூகளிக்கும் பொழுது தான் அந்த குடும்ப ஒரு சொர்க்கம் ஆகிறது. அன்பால் இணைந்து அன்பால் பிணைந்து  அன்பை எல்லோருக்கும் பகிரும் அந்த குடும்பம் என்னும் சொர்க்கத்திற்கு இடையில் பணம் புகழ் பகட்டு அனைத்துமே ஒரு தூசிக்கு த்தான் சமம்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

#Victory King: 'நா' நயம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2363🥰  

வீசுகின்ற வாசனையை பொருத்து தான் மலர்களுக்கு மதிப்பு. அதுபோல் மலர்ந்த மலர்களைப் போல் முகம் மலர்ச்சியுடன் நாம் பேசுகின்ற வார்த்தைகளை பொறுத்து தான் நமக்கு மதிப்பு. எனவே 'நா' நயத்துடனும் நளினமுடனும் பேசி பழகிவிட்டால்  'மதிப்பு'எனும் பொக்கிஷம் நம்மை நோக்கி தானே வந்தடையும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, August 8, 2025

#Victory King : பொய்யையே தங்கள் வாய் மொழியாக்கிக் கொள்பவர் நிலை!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2362🥰

பொய்யையே தங்கள் வாய் மொழியாக்கி அடுத்தவர்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்துதல், பரமயோக்கியன் போல் நடித்து துரோகம் செய்தல் போன்ற பாவ காரியங்களையே செய்பவர்கள் தங்கள் குடும்பத்தையேபொய்யர்களாக்கி பாவத்திற்கு மேல் பாவம் செய்து இன்று சகல வசதிகளுடன்தான் வாழ்கிறோம் என்ற இருமாப்பில் தங்கள் காலத்தை கடத்துபவர்கள் குடும்பமே ஏதாவது ஒரு விதத்தில் மீளா சோகத்திலிருந்து தப்பவே முடியாது. இதுதான் உலக நீதி நியதி.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Thursday, August 7, 2025

#Victory King: காலத்தில் பயிர் செய்தால்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2361🥰  

காலத்தில் பயிர் செய்தால்தான் அது நல்ல மகசூளை தரும். அதுபோல நம் வாழ்க்கையின் அந்தந்த காலத்தில் அதற்கு தகுந்தார் போல் நம் திறமையை வெளிப்படுத்தினால்தான் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். காலம் நமக்காக காத்திருக்காது. காலத்தில் நாம் செய்ய தவறியதை காலம் கடந்த பின் அவை நமக்கு வெறும் ஏக்கங்களாகத்தான் முடியும். உணர்ந்து செயல்படுவோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Wednesday, August 6, 2025

#Victory King: வாழ்க்கைப் பயணம்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2360🥰 

குழந்தைப் பருவம், இளமைப் பருவம், திருமணப் பருவம், குடும்பப் பருவம், ஓய்வுப் பருவம், இறுதிப் பருவம் என பல பருவங்களை உள்ளடக்கி இறைவன் நமது வாழ்க்கைப் பயணத்தை துவக்கிவைத்து ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதை நாம் முறையாக பயன்படுத்தி பயணத்தை இனிதாக்கி இறுதிவரை கடப்பது நம் கையில் தான் உள்ளது.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Tuesday, August 5, 2025

#Victory King: தானத்திலேயே சிறந்தது நிதானம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2358🥰 

"தானத்திலேயே சிறந்தது நிதானம்" நாம் நிதானத்தை இழந்தால் கோபத்தின் உச்சிக்கு சென்று அடுத்தவர்கள் மனதை புண்படசெய்து பகைமைக்கு வித்திட்டு அது நம்மை மனநோய்க்கு ஆளாக்கிவிடும். நிதானம் ஒன்றுதான் அதற்கு வருமுன் காக்கும் மருந்தாகும். அதே சமயத்தில் நம் அவசர கால நிலையில் நாம் நிதானத்தை கடைபிடித்தால் அழிவையும் ஏற்படுத்திவிடும். எனவே சூழ்நிலைக்கேற்ப நிதானம்  என்ற அஸ்திரத்தை பயன்படுத்தினால் மட்டுமே நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Monday, August 4, 2025

#Victory King: எதிர்பார்ப்புகள்!

 🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2359🥰 

கல்நெஞ்சக்காரனிடம் கருணையையும், பண்பற்றவரிடம் பணிவையும், அரக்கனிடம் அன்பையும் எதிர்பார்ப்பது பாலைவனத்தில் நீரோடையையும், தரிசு நிலத்தில் பசுஞ்சோலையையும் எதிர்பார்ப்பதற்கு சமம். எனவே மற்றவர்கள் தரமறிந்து தகுதியறிந்து எதையும் நாம் எதிர்பார்த்தால் மட்டுமே நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Sunday, August 3, 2025

#Victory King: மகிழ்ந்து வாழ்வோம், வாழ்ந்து மகிழ்வோம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2357🥰 

மகிழ்ந்து வாழ்வது என்பது ஒரு கலை. அதை யாராலும் கற்றுக் கொடுக்க முடியாது. இன்பம் துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. எனவே அதில் "அன்னப்பறவை" போல் அபூர்வ சக்தியை பெற்று இன்பத்தை மட்டும் பிரித்தெடுத்து அனுபவித்து வாழப்பழகிவிட்டால் வாழ்க்கையே சுகம் தான் நமக்கு. சுமையல்ல!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Saturday, August 2, 2025

#Victory King: பண்பிற்கான இலக்கணம்!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2356🥰 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கை, நயமான இயல்பான பேச்சு, யாரையும் காயப்படுத்தாத அன்பு காட்டும் பாங்கு, பண்பு மாறாத பார்வையும் செயலும், உரிமையோடும் உள்ளன்போடும் உறவுகளிடம் உறவாடும் தன்மை இவைகள் தான் நம் பண்பிற்கான இலக்கணம்  உணர்வோமே!

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏

Friday, August 1, 2025

#Victory King: தனித்துவத்துக்குக் கிடைக்கும் மரியாதை!

🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2355🥰 

ஒருவருக்கு பணம், புகழ், பவர் இவைகள் அனைத்தும் இருக்கும் பொழுது கிடைக்கும் மரியாதை ஒரு போலி தான். இவைகள் அனைத்தையும் அவர் இழந்து நிற்கும் நிலையில்தான் அது அவருடைய தனித்துவத்துக்கு கிடைத்த மரியாதை இல்லை என்ற உண்மை புரியும். ஒருவருக்கு அவருடைய தனித்துவத்திற்கு கிடைக்கும் மரியாதை தான் உயிரோடு இருக்கும் பொழுதும் சரி இறந்த பிறகும் சரி நிலைத்து நின்று அவரை கௌரவிக்கும்.

🙏 Victory King  [Alias] V. Krishnamurthy(VK)🙏