விக்டரிகிங்கின் சிந்தனைத் துளி: 1083
ஒருவருக்கு சுயநலம் மேலோங்கும் போது என்னதான் பட்டமும் பதவியும் பெற்றிருந்தாலும் அவர்கள் எண்ணம் நல்லதையே நாடாது. அடுத்தவனை எப்படி அழிக்கலாம் தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதில்தான் சிந்தனைஓடும். அது ஒரு நிலையில் அவர்கள் கண்ணையே மறைத்து படுகுழியில் விழுந்து தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் நிலைதான் வரும். எனவே எந்நிலையிலும் நம் மனதில் சுயநலத்திற்கு இடங்கொடாமல் வாழ்ந்தால்மட்டுமே நம் வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்து வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment