விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி: 1089
பந்தியில் பாரபட்சம் காட்டக்கூடாது. பெற்ற பிள்ளைகளிடம் பாசத்தில் பிரிவினை காட்டக்கூடாது. அதுபோல் நம் உறவினர்களிடம் பழகும்பொழுது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள் ஆக இருந்தாலும் சரி திருமணமாகி தனியாக இருந்தாலும் சரி கணவனை இழந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரிடத்திலும் அந்த குடும்பத்தில் மற்றவர்களுக்குக் கொடுக்கும் உரிய அந்தஸ்தை இவர்களுக்கும் கொடுப்பதுதான் பண்பான செயல். எனவே நமக்குப் பிறகும் நம் தலைமுறைகளின் வாழ்க்கை தொடரும் என்பதை நாம் நன்கு மனதில் கொண்டு பாரபட்சம் இன்றி வாழ்ந்து உறவுச் சங்கிலியை வலுப்படுத்துவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment