Status 2021 (21)
நாம் ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்தால் எண்ணிய உடனேயே செய்ய வேண்டும். ஏனெனில் கொஞ்சம் தாமதித்தாலும் இடர்பாடுகளும் வரலாம். எண்ணங்கள் மாறலாம். அதுபோல் நாம் ஒரு நல்ல விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது நம் ஆழ்மனதில் இருந்து அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். ஏதோ சம்பிரதாயத்திற்காக கூறுவதும் ஒன்றுதான் கூறாமல் இருப்பதும் ஒன்றுதான். அப்பொழுதுதான் மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் பொழுதும் அவர்கள் ஆழ் மனதிலிருந்து வரும். நாவிலிருந்து வருவது பெரும் சம்பிரதாயமே. உறவுகளின் வலிமையும் நட்பின் ஆழமும் நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும். உறவுகளின் அருமையை புரிந்து நடப்போம். புன்னகையோடு வாழ்வோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment