Status 2021 (17)
நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது நாம் சிந்திக்கும் திறனையும் செயல்திறனையும் இழக்கிறோம். சக்தியை இழக்கிறோம். அதனால் நமது உடல் மேலும் மேலும் பலவீனமாகி எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. இந்த சமயங்களில் நிதானமாக அமர்ந்து நமது பழைய கால நினைவுகளை அசை போடும் பொழுது அந்த நினைவலைகளில் ஐக்கியமாகி உற்சாகத் தன்மை ஏற்பட்டு மகிழலாம் அல்லது நமக்கு பிடித்த ஏதோ ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அதில் அதிக கவனம் செலுத்தலாம். உளமார்ந்த உறவுகளுடனோ நட்பு வட்டங்களுடனோ உரையாடி மனதை திசையில் மாற்ற முயற்சிக்கலாம். தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தால் மன அழுத்தம் மேலும் மேலும் தான் அதிகமாகவே தவிர விடை கிடைக்காது.எனவே ஏதாவது ஒரு விதத்தில் நம்மை நாம் மன அழுத்தத்தில் இருந்து வெளியேற முயற்சித்து உடல் நலத்தை பேணி காப்போம்.
Victory King (VK)
No comments:
Post a Comment