Status 2021 (11)
எதுவுமே எளிதில் கிடைத்து விட்டால் அதன் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக ஒரு வேலையைத் தேடி செல்லும்பொழுது அது நமக்கு உடனே கிடைத்துவிட்டால் அது நம்முடைய தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்த ஒன்று என்று நினைத்து பெருமைப்பட்டு அதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நாம் மென்மேலும் உயரலாம். அதை விடுத்து தன் திறமைக்கு அந்த வேலையை கொடுத்தே ஆகவேண்டும் என்ற இறுமாப்பில் இருந்தால் அந்த வேலையில் முழு ஈடுபாடு இருக்காது. அதன் விளைவு வேலையில் கவனம் சிதறி வேலை கொடுத்தவரை குறை கூறிக்கொண்டு தன் வேலையை மாற்றி மாற்றி கொண்டே செல்ல நேரிடும். எனவே செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மனதில் கொண்டு எடுத்த வேலையை ஈடுபாட்டுடன் செய்து மனத்திருப்தியுடனும் மகிழ்வுடனும் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment