Status 2021 (13)
இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் மகரத்தில் பிரவேசிக்கும் சூரிய பகவானை மனதார வணங்கி அவர் அருள் பெற்று வீட்டில் அடுப்பில் பால் பொங்கட்டும். நம் அனைவரது உள்ளங்களிலும் மட்டற்ற மகிழ்ச்சி நிலைத்து நிற்கட்டும். உறவுகளோடு இதயங்கள் இணைந்து களிப்படையட்டும். பாசப் பிணைப்புகள் பெருகி வளரட்டும். பட்ட துன்பங்கள் நம்மை விட்டு விலகட்டும். பாவிகளின் பார்வை நம் மீது படாது இருக்கட்டும். நேர்மை நம்மை விட்டு விலகாது இருக்கட்டும். மொத்தத்தில் தைப்பொங்கல் திருநாள் நம் வீட்டில் குதூகலத்துடன் துள்ளி விளையாடட்டும். மென்மேலும் நம் நட்புணர்வு தொடர்ந்து மகிழ்ச்சியை சுவாசித்து சூரிய பகவானின் அருள் பெற்று அனைவருக்கும் தித்திக்கும் திருநாளாம் இந்த தைப்பொங்கல் திருநாள் இனிதாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Victory King (VK)
No comments:
Post a Comment