Status 113
தம் இல்லத்தையும், உடலையும் எப்படி நாகரீக உலகத்திற்கு அழகுபடுத்துகின்றோமோ, அதைப்போல நம் அகத்தினையும் அன்பென்னும் சத்திய நியதியில் அழகுறச் செய்து, நல் ஞானம் பெறுங்கள். உடல் அழகைக் கண்டு மகிழ்வதை போல் அக அழகை அழகு படுத்திடுங்கள்.- இந்து தர்ம சாஸ்திரம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது நல்லவர்களுக்கான பொன் மொழி. நல்லவர்களுக்கு உள்ளத்தில் உண்மை இருப்பதால் அதன் பிரதிபலிப்பு முகத்தில் பளிச்சென தெரியும். ஆனால் தீயவர்களோ அகத்தில் ஆயிரம்அழுக்கை வைத்துக்கொண்டு, முகத்தில் செயற்கையான சிரிப்புடன் நாவினால் தேனொழுக பேசி மற்றவர்களுக்கு வஞ்சகம் செய்வார்கள். இதை நாம் இனங்கண்டு பழக வேண்டும். எப்பொழுதும் உண்மை உண்மைதான். போலி என்றோ ஒருநாள் கேலிக் கூத்துக்கு ஆள் ஆகிவிடும்.
-Victory King (VK)
No comments:
Post a Comment