விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 1115
பூமாதேவியை நமஸ்கரித்து இப்பூ உலகை பார்த்தது முதல் இன்றுடன் 76 ஆண்டுகள் நிறைவு பெற்ற தருணத்தில் என்னை பெற்றெடுத்து அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் வளர்த்து இந்த உயர் நிலையில் இருக்கும் வாய்ப்பை அளித்த பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் குடும்பத்தில் பெரியவர்களுக்கும் இன்றும் அன்பையும் பாசத்தையும் காட்டி வரும் குடும்ப இளைய தலைமுறைகள் அனைவருக்கும் திருமண பந்தத்தில் 54 ஆண்டுகள் உறுதுணையாக அனைவரையும் அரவணைத்து சென்று கொண்டிருக்கும் மனைவிக்கும், எங்களைப் பாசத்தோடும் அன்போடும் பண்போடும் வளர்த்து இன்று நாங்களும் எங்கள் பிள்ளைகளுடன் நலமுடன் வளமுடன் வாழ்கிறோம் என்று வாயாரப் புகழும் என்னுடைய பிள்ளைகளுக்கும் என்னுடன் அன்போடு பழகி வந்த அனைத்து நண்பர்களுக்கும் இனிய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அந்த நிகழ்வுகளை இந்த 77வது படியில் நின்று கொண்டு மானசீகமாக கம்பீரத்துடன் பார்க்கும் பாக்கியத்தை எனக்கு அருளிய இறைவனுக்கு மனதார நன்றியை தெரிவித்து மகிழ்வதில் பெருமை அடைகிறேன்.
Victory King (VK) Alias V. Krishnamurthy
No comments:
Post a Comment