Status 2021 (62)
சுதந்திரம் என்பது நினைத்ததை எல்லாம் செய்வதற்கான உரிமை ஆகாது.
காந்தியடிகள்
காந்தியடிகளாரின் இந்த அருமையான கூற்று பெற்றோர்களுக்குத்தான் பொருந்தும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் என்ன செய்தாலும் கேட்காமல் அவர்கள் செய்வதெல்லாம் சரிதான் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு மற்றவர்கள் வாயை அடைத்து பிள்ளைகள் வாழ்க்கையே சிக்கலாக்கி வருகிறார்கள் சிலர். கொடுக்கும் சுதந்திரம் ஒரு கட்டுப்பாட்டோடு இருந்தால் பிள்ளைகள் தங்களை தானே திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. இல்லையேல் பிள்ளைகள் கட்டவிழ்த்துவிட்ட காளைபோல் தறிகெட்டு செல்லும் நிலைதான் வரும். எனவே, பிள்ளைகள் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமென்றால் பெற்றோர்கள் அவர்களுக்கு கட்டுப்பாடுடன் சுதந்திரத்தைக் கொடுத்து அன்போடும் பண்போடும் வளர்க்க வேண்டும்!
Victory King (VK)
No comments:
Post a Comment