Status 2021 (60)
குடும்பம் என்பது செங்கலால் கட்டப்பட்ட கட்டடத்தில் நடக்கும் இல்லறம் மட்டுமல்ல. அது அன்பான உள்ளங்கள் உள்ளன்போடு வாழும் அன்பு ஆலயம்.பெற்றோர்கள் உறவுகளின் உன்னதத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அளவுகடந்த பாசத்தின் காரணமாக குழந்தைகளைக் கண்டிக்காமல் விட்டால் அக்குழந்தைகள் வழிதவறிச்செல்லும். வீட்டின் வலியையும் வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். உங்கள் கனவுமூட்டைகளைச் சுமக்கும் சுமைதாங்கியல்ல குழந்தைகள். குடும்பம் ஒரு போதிமரம். குடும்பம் உறவுகளின் அருமை சொல்லித்தரும் பண்பாட்டுப் பயிற்சிக்கூடம். சண்டையிட்டு மண்டையுடைக்க குடும்பம் ஒன்றும் போர்க்களம் அல்ல. காட்டுப்பறவைகள்கூட ஒற்றுமையாக இருக்கும் போது வீட்டு உறவுகள் நாம் ஏன் இணக்கமின்றி பிணக்கத்தோடு அலையவேண்டும். எனவே ஒன்றுபட்டு ஒற்றுமையாய் மகிழ்வோடு வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment