Status 2021 (35)
ஒருவரின் வளர்ச்சி, வெற்றி, வசதி, புகழ் இவை நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அதனைக் கண்டு பொறுமுதல், நமக்குக் கிடைக்காதது அவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற குமுறுதல், இவைதான் பொறாமையாக வெடித்து அவர்கள் மீது கோபதாபங்கள் சண்டை சச்சரவுகள் என தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் நிலை வந்துவிடுகிறது. இதற்கு மூல காரணம் அவர்களின் இயலாமையே. எனவே, அந்த அளவிற்கு நாம் உயர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக சிந்தித்து செயல்பட்டு வெற்றி அடைய நாம் முனைந்தால் நம்மிடம் அந்த பொறாமை அண்டவே அண்டாது இதனை கடைபிடிப்போம் களிப்புடன் வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment