Status 2021 (42)
நேரடியாக நமக்கு துரோகம் செய்பவர்களை நாம் எளிதில் எதிர்கொண்டு விடலாம். ஆனால் நம் அருகிலேயே இருந்து அன்பொழுக பேசி நம்மை அழிக்க நினைப்பவர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம். ஒருவர்மேல் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை. அதுவே அதிதீவிர நம்பிக்கை யாக மாறும்பொழுது அதை அடுத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நம்மை அழிக்க நாமே ஒரு காரணமாகி விடுவோம். நம்பிக்கை என்பது தும்பிக்கை போல் வலுவாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் நம்மை அழிக்க முற்படுகிறார் என்று தெரிந்தவுடன் நமக்கு யானை பலம் வந்து தும்பிக்கையால் தூக்கி எறிய நாம் தயாராக இருக்க வேண்டும். இளகிய மனம் மட்டும் இருந்தால் போதாது. தேவைப்படும் பொழுது இறுகிய மனதோடும் இருந்து செயல்பட்டால்தான் நாம் பிழைப்போம்.
Victory King (VK)
No comments:
Post a Comment